பல்வேறு திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை

12 January 2021, 3:21 pm
Quick Share

கரூர்: கிருஷ்ணராயபுரம் பல்வேறு பகுதியில் 10 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா துவங்கி வைத்தார் .

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் உட்பட்ட பகுதிகளான உப்பிடமங்கலம் ஜெகதாபி, வெள்ளியணை, மணவாடி, மூக்கனாங்குறிச்சி, பிச்சம்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை, சமுதாயக் கூடம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ரூ.10 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜையிட்டு நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் தமிழக அரசு வழங்கிய நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 7

0

0