லாரி தலைகுப்புறக்கவிழ்ந்து விபத்து: லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Author: Udayaraman
11 October 2020, 9:41 pm
Quick Share

கரூர்: கரூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் இருந்து லாரி தலைகுப்புறக்கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் இருந்து சேலத்திற்கு தேக்கு மரக்கட்டை லோடு ஏற்றிக்கொண்ட டாரஸ் லாரி நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த லாரி தென்காசி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் (40) என்பவரும், இவருடன் லாரியின் கிளீனராக யுவராஜ் (24) என்பவரும் சென்றுள்ளார். லாரியானது இன்று கரூர் மாவட்ட சுக்காலியூர் அடுத்த அமராவதி ஆற்றுப் பாலத்தை கடக்கும் போது ஓட்டுநர் கண்ணன் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அமராவதி ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுனர் கண்ணன் மற்றும் கிளீனர் யுவராஜ் ஆகியோர் படுகாயத்துடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 29

0

0