பாராட்டும் வகையில் செயல்படும் தமிழகம்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு…
4 August 2020, 5:31 pmகரூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முறையில் மத்திய அரசு பாராட்டும் வகையில் நமது மாநிலத்தில் கொரோனோ பரிசோதனை சிறப்பான முறையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காலம் என்பதால் நமது ஊரில் மட்டுமில்லை நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மக்கள் முடங்கி இருக்கும் நிலையில், ரேஷன் கார்டு மூலமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வரும் நிலையில்,
தமிழக அரசு 1,000-ம் ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் நல வாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு 1,000-ம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடிச் சென்று 1,000-ம் வழங்க முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து வழங்கப்பட்டது. தமிழக அரசைப் பொறுத்தவரை யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அத்தனையும் விலையில்லாமல் வழங்கி உள்ளார். என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் சிகிச்சையில்,
மத்திய அரசு பாராட்டும் வகையில், நமது மாநிலத்தில் கொரோனோ பரிசோதனை சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் மட்டுமே தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில்உடல் சரியில்லை என்று சிகிச்சைக்கு சென்றால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்க படுகின்ற நிலை தமிழ்நாட்டில் அது போன்ற நிலை இல்லை. ஒருவருக்கு கொரோனா தொற்று என்றால் அந்த ஊர் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதற்கு உரிய மருந்து வரும்வரையில் அரசு சொல்வதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அப்பொழுது கூறினார்.