நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஆட்சியர் அறிவுறுத்தல்…

9 August 2020, 6:26 pm
Quick Share

கருர்: நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை தொடரில் பெய்து வரும் மழை நீர் நொய்யல் ஆறாக பாய்ந்து கரூர் மாவட்டம் நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டம் வழியாக வரும் இந்த நொய்யல் ஆறு கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராமத்தின் வழியாக கரூர் மாவட்டத்தில் நுழைத்து 20 கி.மீ தூரம் பயணித்து நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

இன்று வெள்ள நீர் வரத்துவங்கி படிப்படியாக அதிகரித்து தற்போது 2 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் மழை நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆற்றின் மூலம் 2 ஆயிரம் ஏக்கரும், பாசன வாய்க்கால் மூலம் 18 ஆயிரம் ஏக்கம் பாசன வசதி பெறுகின்றன. இந்த வெள்ளப் பெருக்கால் அவற்றை நம்பியுள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.