நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

11 September 2020, 9:19 pm
Quick Share

கரூர்: கரூர் அடுத்த ஆட்சிமங்களம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 587 நியாயவிலை அங்காடிகளில் 384 முழு நேர நியாய விலை அங்காடிகளும் 203 பகுதிநேர நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் covid-19 வைரஸ் தடுப்பு நிவாரணம் 2020 தொடர்பான அறிவிப்புகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பயன்பட்டு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு விலையில்லா முகக் கவசங்கள் வழங்க அறிவிப்பை தொடர்ந்து

இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சி மங்கலம் நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் துவங்கி வைத்தார். கரூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக நகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 163 நியாயவிலைக் கடைகளில் உள்ள 1,14,185 குடும்ப அட்டைகளில் 3,59,315 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக் கவசங்கள் வீதம் 7,19,000 முகக் கவசங்கள் விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Views: - 0

0

0