கரூரில் பாரம்பரிய சேவல் கட்டு போட்டி தொடக்கம்

13 January 2021, 3:33 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்டம் பூலாம் வலசு கிராமத்தில் மதுரை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுடன் பாரம்பரிய சேவல் கட்டு போட்டி தொடங்கியது.

முத்தாலம்மன் வழிபாட்டோடு உற்சாகமாக வரவேற்புடன் விழாவை நடத்தி வருகின்றனர். கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட சேவல்கட்டுக்கு அனுமதி அளித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று முதல் 3 நாட்கள் நடத்தபடுகின்றன. கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பூலாம்வலசு, கோவிலூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் சேவல்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2015ஆம் ஆண்டு சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி கிழித்து இருவர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சேவல்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் தடை செய்தது.

இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பகுதியில் சேவல் சண்டை நடைபெறவில்லை. மாவட்டம் முழுவதும் தடை இருப்பதால் மாவட்டத்தில் உள்ள சேவல் பிரியர்கள் சேவல்கட்டு போட்டியை நடத்த முடியாமல் தவித்து வந்தனர். ஆங்காங்கே ஒரு சிலர் தனியார் தென்னந்தோப்புகளில் நடத்தினாலும் அவற்றை நடத்தவிடாமல் காவல் போலீசார் தடுத்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்தது போல், சேவல்கட்டு போட்டி அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோரிக்கை விடுத்து வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவல் கட்டு நடத்த கடந்த ஆண்டு பூலாம்வலசு பகுதியில் மட்டும் நடத்த வேண்டுமென்று அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு அரவகுறிசி அடுத்த பூலாம்வலசில் ஒரு சில சிறு குளம் உள்ள பகுதியில் பந்தல் அமைத்தல் மற்றும் இருக்கைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடத்தி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கட்டு பிரியர்கள் சேவல் சண்டையில் ஈடுபட்டது கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குர்ஆனோ காலமென்பதால் அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க சேவல்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.

Views: - 5

0

0