கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது

Author: Udhayakumar Raman
21 September 2021, 4:28 pm
Quick Share

கரூர்: கரூரில் 1,000 லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி மற்றும் கலப்பட டீசலை விற்க முயன்ற ஒருவரையும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கரூரில் கலப்பட டீசல் விற்கப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று தாராபுரம் சாலையில் காசிபாளையம் என்ற இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து டேங்கர் லாரி ஒன்றில் 1000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது இதையடுத்து. அந்த லாரியில் இருந்த கலப்பட டீசலை விற்க முயன்ற ஆகாஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1000 லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்த குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 170

0

0