தீபாவளி பரிசாக ஊதியம் குறைப்பா ? கொந்தளிப்பில் பேரூராட்சிகளின் ஊழியர்கள் – பேரூராட்சிகளின் இயக்குநரை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

1 November 2020, 6:40 pm
Quick Share

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் கலந்தாய்வு கூட்டம் கரூரில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சி.பழனிவேல் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் சங்க மாநில தலைவர் கு.சரவணன், பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் வெ.சிவக்குமார், கரூர் மாவட்ட பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் உதயக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் என்று ஏராளமானோர் சமூக இடைவெளி விட்டும், முகக்கவசங்கள் அணிந்தும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., பேரூராட்சி துறையில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களின் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரால், தர ஊதியம் 1900 லிருந்து ரூ 1300 ஆக கடந்த மாதம் 7 ம் தேதி முதல் உத்திரவிடப்பட்டுள்ளது.

இதனால், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 6 ஆயிரம் முதல் ரூ 7 ஆயிரம் வரை ஊதியக்குறைப்பு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், இதனை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் முன்பாக மாலை 5 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்பாட்டமும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இந்த ஊதியகுறைப்பு நடவடிக்கை தீபாவளி பரிசா ? என்றும் பேரூராட்சி பணியாளர்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், இதனால், தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளில், குடிநீர் திட்ட்த்தில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0