சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொது மக்கள்

11 July 2021, 5:41 pm
Quick Share

கரூர்: கரூரில் நீண்ட வரிசையில் அதி காலை முதல் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பொது மக்கள் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் .

கரூர் மாவட்டத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அவ்வப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று 4000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 10 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அதிகாலை சுமார் 3 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை காலை 7.30 மணியளவில் போலீசார் 400 நபர்களை மட்டும் அனுமதித்து மற்றவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். காத்திருந்த பொதுமக்களுக்கு காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 967 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Views: - 111

0

0