கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் காட்பாடி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு

16 July 2021, 3:27 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் காட்பாடி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிழ்முட்டுகூர் பகுதியில் தெரு நாய் குட்டி நேற்று அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் கிணற்றுக்குள் விழுந்த நாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த நாய் இரண்டாவது நாளாக இன்று மேலே வர துடித்துக் கொண்டிருந்த போது, இன்று அப்பகுதி மக்கள் காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த நாயை உயிருடன் மீட்டு அப்பதியில் விட்டனர். மேலே வந்த நாய்தீயணைப்புத் துறையினரை நன்றி செய்யும் வகையில் அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. நாய் விழுந்த கிணற்றில் புதர்களாக இருந்தது அதே சமயம் தண்ணீர்இல்லை எனக் கூறப்படுகிறது அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

Views: - 220

0

0