குமரியில் இருந்து கேரளாவுக்கு வேன் மூலம் மண்ணென்னை கடத்தல் : 525 லிட்டர் பறிமுதல்… ஓட்டுநர் எஸ்கேப்!!!

Author: Udayaraman
26 July 2021, 6:16 pm
Kerosene Seized - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கேரளாவுக்கு கடந்த முயன்ற 525 லிட்டர் மானிய மண்ணெண்னையை சோதனைச் சாவடியில் போலீசார் பறிமுதல் செய்த நிலையில் ஒட்டுநர் தப்பியோடினார்.

குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு தமிழக அரசு மானிய விலையில் வழங்க கூடிய மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

அதற்க்காக குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில புரோக்கர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு கடத்தல் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குமரி மாவட்டத்தில் இருந்து பயணிகள் ஏற்றி செல்லும் டெம்போ டிராவலர் வேன் ஒன்று காக்கவிளை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு கடந்து செல்ல முயலும் போது சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.

உடனே வேனை ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் வேனை சோதனை செய்த போது வண்டியின் உள்ளே சீட்டுகளுக்கு இடையே சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்களில் 525 லிட்டர் மண்ணெண்ணெய் நூதன முறையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த வேனுடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 292

0

0