தூத்துக்குடியில் கதர் விற்பனை இந்த ஆண்டு ரூ.80 லட்சம் குறியீடு நிர்ணயம்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

By: Udayaraman
2 October 2020, 3:55 pm
Quick Share

தூத்துக்குடி: மகாத்மா காந்தியின் 152 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் சிறப்பு கதர் விற்பனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று துவக்கி வைத்தார்.

மாமா காந்தியின் 150 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையிலுள்ள கதர் விற்பனை அங்காடியில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், சிறப்பு கதர் விற்பனையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கடந்த ஆண்டு விற்பனை குறியீடு 70 லட்சம் நிர்ணய செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 80 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்து துணி ரகங்களுக்கு 30% வரை சிறப்பு தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். அதிகம் விற்பனை நடைபெறும் அதன் மூலம் கிராமப்புற நெசவாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இது அமையும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Views: - 32

0

0