தேசியகொடியை ஏற்றி வைத்த கிரண்பேடி

26 January 2021, 1:40 pm
Quick Share

புதுச்சேரி: குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் தேசியகொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரி அரசு சார்பில் நாட்டின் 72வது குடியரசு தினவிழா இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர், அரசு செயலர்கள் பங்கேற்றனர். மேலும் கொரோன பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மிக குறைந்த அளவிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட துணைநிலை கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லாமல் சென்றனர். முன்னதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற கோரி குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த கிரண்பேடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 6

0

0