10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் கிரண்பேடி திட்டமிட்டு சதி வேலை; நாராயணசாமி குற்றச்சாட்டு

8 November 2020, 9:43 pm
Quick Share

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் கோப்பை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட முடிவு எடுக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவையில் முடிவு செய்து அனுப்பிய கோப்பிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், கல்வி தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்துகின்ற சமயத்தில் அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், குற்றம்சாட்டினார்.

மேலும் 10% விவகாரத்தை காலதாமதம் படுத்த திட்டமிட்டு சதி வேலைய கிரண்பேடி செய்து இருக்கிறார் என்றும், மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நாளை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் 10% இட ஒதுக்கீடு கிடைக்க கூடாத சூழ்நிலை உருவாக்கி இருப்பது துரதிர்ஷ்டவசமானது மாணவர்களை வஞ்சிக்கும் செயல் என்றார்.

மேலும் திட்டமிட்டே மாநில அரசை பழிவாங்கும் செயலில் கிரண்பேடி ஈடுபடுகிறார் என தெரிகிறது என்றார். இதேபோல் பாஜகவின் முழு ஏஜெண்டாக கிரண்பேடி செயல்படுகிறார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான படியால் வெளியிடப்பட்டுள்ளது அதில் ஆந்திரா, தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் போலி சான்றிதழ் அளித்து இடம் பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும்,

இது தொடர்பாக ஜிப்மர் தலைமை அதிகாரியை தொடர்பு கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை முழுமையாக கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாகவும், மேலும் போலீ சான்றிதழ் கொடுத்து ஜிப்மரில் இடம் பெற்றனரா என மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாவும், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மருத்துவ கழகத்திற்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

Views: - 24

0

0