உறையூர் பகுதிகளில் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு

Author: Udhayakumar Raman
19 March 2021, 2:24 pm
Quick Share

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு உறையூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு இன்று உறையூர் பகுதியில் உள்ள லிங்க நகர், பாண்டமங்கலம், பாத்திமா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவிற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

Views: - 51

0

0