இந்த ஆண்டில் முதல்முறையாக நிரம்பியது கொடைக்கானல் எழுபள்ளம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி…!!

Author: Aarthi Sivakumar
11 June 2021, 11:35 am
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் எழுபள்ளம் ஏரி இந்த ஆண்டில் முதன் முறையாகமுழு கொள்ளளவை எட்டி மருகால் பாய்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் எழுபள்ளம் ஏரி எழில் கொஞ்சும் புல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி,தடுப்பணையின் மட்டத்தை உயர்த்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 90 லட்சம் ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது.

அத்திட்டத்தை முந்தைய அரசு முறையாக செயல்படுத்தாமல் முறைகேடுகள் செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், நீதிமன்றத்தின் மூலம் அத்திட்டத்திற்கு உள்ளூர் மக்களால் தடை வாங்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு வருட காலமாக அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இன்று வரை கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டில் முதன் முறையாக கடந்த மாதம் மற்றும் தென்மேற்கு பருவமழையால் முழுகொள்ளளவை எட்டி மருகால் பாய்ந்துள்ளது. இந்த ஏரியில் நீரை இன்னும் சில மாதங்களில் பூண்டு வெள்ளாமைக்கு அக்கிராம மக்கள் பயன்படுத்தியதும், ஏரியை தூர் வாரி, மட்டத்தை உயர்த்தி குடிமராமத்து செய்ய, புதிய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 187

0

0