கொடைக்கானலில்தேசிய அறிவியல் தின விழா: பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள்

1 March 2021, 1:57 pm
Quick Share

கொடைக்கானல்: கொடைக்கானலில்தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, உள்ளிட்ட பல போட்டிகள் அறிவியலை மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்தப் பரிசளிப்பு விழாவிற்கு கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் செல்வேந்திரன்,குமரவேல் ,எபினேசர் உள்ளிட்டோரும் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 1

0

0