கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

15 September 2020, 5:50 pm
Quick Share

நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 18 . 9. 20 க்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து அன்று அனைவரும் ஆஜராக உத்தரவிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இதை அடுத்து இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 7 பேர் ஏற்கனவே வழக்கு விசாரணை தேதியில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். மீதமுள்ள சதீசன், திபு, சந்தோஷ் சாமி ஆகிய 3 பேருக்கு பிணையில் வராத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில் இன்று அந்த 3 பேரில் சந்தோஷ் சாமி நீதிபதி முன் சரணடைந்தான். மேலும் இரண்டு சாட்சிகளுக்கான விசாரணையும் இன்று நடைபெற்றது பின்பு வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 18. 9 .20.க்கு வழக்கை ஒத்திவைத்து அன்று அனைவரும் ஆஜராக உத்தரவிட்டார்.

Views: - 8

0

0