கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…

24 November 2020, 11:27 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோட்டார் சவேரியார் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாட்கள் திருவிழா ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பங்குத்தந்தையர்கள் பங்குமக்கள் மற்றும் தமிழகம், கேரளாவை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. ஒன்பதாம் திருவிழாவான வரும் 2ம் தேதி இரவில் தேர்பவனி நடைபெறுகிறது. பத்தாம திருவிழாவான 3-ந்தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேர் பேராலயத்தை வந்தடைகிறது. தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

Views: - 0

0

0