மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கே.பி.அன்பழகன்

30 September 2020, 8:57 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பந்தாரஅள்ளியில் ரூ.4லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தமிழக அரசின் உத்தரவுபடி தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பந்தாரஅள்ளியில் பேட்டரியில் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 3 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிட்டிலும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு நபருக்கு ரூ.56,400 மதிப்பிட்டிலும், சிறப்பு சக்கர நாற்காலி ஒரு நபருக்கு ரூ.7,750 மதிப்பிட்டிலும்,

சக்கர நாற்காலி 2 பயனாளிகளுக்கு ரூ.12,540 மதிப்பிட்டிலும், காதிற்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.7,700 மதிப்பிட்டிலும், கொரோனா நிவாரண உதவி தொகை 31 பயனாளிகளுக்கு ரூ.31,000 மதிப்பிட்டிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 18 நபர்களுக்கும் மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்து 390 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை உயர் கல்வி துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.