விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் மனு…

10 August 2020, 3:38 pm
Quick Share

கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் சிலை செய்வோர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விநாயகர் விநாயகர்சிலைகள் செய்து விற்பனை செய்யும் மண்பாண்ட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,” கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விநாயகர் சிலைகள் செய்து விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு விற்பனை செய்யும் தொழிலை தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம் எனவும்,

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் விநாயகர் சிலை விற்பனை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும், இதனால் 115 குடும்பங்களின் சுமார் 700 பேர் இந்த தொழிலை செய்து வருகிறோம், தற்போது எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது எனவும், இந்த மாவட்டத்தில் தயார் செய்யப்படும், விநாயகர் சிலைகள் கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கு விற்பனையாகும் எனவும், ஆனால் ஊரடங்கு காலத்தில் ஒரு மாவட்டத்தை விட்டே வெளியே செல்வது கேள்விக்குறியாக உள்ளது எனவும்,

எனவே தங்கள் வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்சம் 5 அடி சிலைகளாவது விற்பனை செய்ய அனுமதி தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் சிலைகள் விற்பனையாகாமல் போகும் பட்சத்தில் தங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மானிய கடன் வழங்க வேண்டும் எனவும், அப்படி வழங்கப்பட்டால் மட்டுமே அடுத்த வருடம் இந்த தொழிலை தங்களால் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே முடங்கிப்போன தங்கனுடைய வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு தெரிவித்து தங்களை பாதுகாக்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 0

0

0