அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்

6 April 2021, 8:02 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வீ.ராஜேந்திரனின் கார் கண்ணாடியை திமுகவினர் கல்வீசி உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி எமகல்நத்தம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுகவினர் வாக்குச்சாவடி மையம் முன்பாக குவிந்தனர். தகவலறிந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வீ.ராஜேந்திரன், பர்கூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் இரு தரப்பினர் வாக்குசாவடி முன்பாக குவிந்தனர். இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டு ராஜேந்திரனும் தாக்கப்பட்டார். இதனால் அவர் கை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் நிலைமை மிகவும் மோசம் அடையவே காவல்துறையினர் எமக்கல் நத்தம் வாக்குச்சாவடி மையம் முன்பாக குவிக்கப்பட்டனர். இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுத்தி அனைவரையும் வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற செய்தனர். அதிமுக திமுகவினரிடையே ஏற்பட்டுள்ள கைகலப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 36

0

0