குமரி பா.ஜ.க நிர்வாகியை கொலை செய்ய திட்டம்.!அச்சுறுத்தல் காரணமாக வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு .!

3 March 2021, 8:28 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி பா.ஜ.க நிர்வாகியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

குமரிமாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ்.பி.முத்துராமன் கடந்த 2017 ம் ஆண்டு ரவுடி கும்பலால் அரிவாள்,கத்தி ஆயுதங்களால் தாக்கப்பட்டார். இதில் வெட்டு காயங்களுடன் தப்பிய முத்துராமன் கண்டால் தெரியும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்மந்தமுடைய பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பில் நீதிமன்றம் கடந்த ஆண்டு கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை விதித்தது.

இந்நிலையில் தண்டனைப்பெற்று வரும் குற்றவாளி தற்போது ஜாமீனில் வெளியே வந்து குமரிமாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமனை மிரட்டும் நோக்கில் அச்சுறுத்தல் செய்ய ரவுடி கும்பலுடன் சேர்ந்து பின் தொடர்ந்துள்ளனர். இதை கண்காணித்த காவல் துறையினர் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் உள்ள முத்துராமன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.இந்த சம்பவம் நாகர்கோவில் வட்டாரத்தில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 3

0

1