ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்: சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணி தீவிரம்

Author: kavin kumar
20 August 2021, 3:57 pm
Quick Share

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் எல்லப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற இருப்பதையொட்டி இன்று கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்றது. ஸ்ரீ கருப்பணசாமி மற்றும் முருகன், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நாளை காலை கும்பாபிஷேகம் ஆறு மணி முதல் ஏழு முப்பது மணிக்குள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச மரகன்று வழங்க உள்ளதாகவும், அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

Views: - 466

0

0