கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

15 April 2021, 5:33 pm
Quick Share

தேனி: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் கொடைக்கானல் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு அருவிப் பகுதிக்குச் சென்று அருவியை நேரில் பார்த்து கண்டுகளிக்க அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் வனத்துறை ஊழியர்கள் அருவிப் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் கூறுகையில், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக அருவிப் பகுதிக்குச் சென்று பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Views: - 17

0

0