மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

13 July 2021, 9:40 am
Teacher in Gundas - Updatenews360
Quick Share

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் ஹபீப் முகம்மது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் ஹபீப் முகம்மது. இவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

தனது பாலியல் இச்சைக்கு இணங்காவிட்டால் மதிப்பெண்களில் கை வைத்து விடுவேன் என்று இவர் மிரட்டும் ஆடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடந்த மாதம் ஆசிரியர் ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் ஹபீப் முகம்மது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆசிரியர் ஹபீப் முகம்மது மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஹபீப் முகம்மது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Views: - 24

0

0