வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்திக் கொலை…
6 August 2020, 4:15 pmகன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம், வசந்தம் நகரில் வீட்டுக்குள் நீலாவதி (வயது 42 ) என்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லீலாவதி தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இரவு வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிகள் யார் ? என்ன காரணம் ? என்பது குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் ஆய்வு கூறுக்காக ஆச்சரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டில் உள்ள தடயங்கள், செல் போனில் நேற்று வந்த அழைப்புகள் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இச் சம்பவம் இப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.