57 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

23 November 2020, 10:54 pm
Quick Share

வேலூர்: 57 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலூர் மாவட்டம்,காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியை சேர்ந்த பரிமளா(57) என்பவர் கடந்த 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் 13 -ல் வீட்டில் தனியாக இருந்த போது கல்லூரி மாணவர்கள் என கூறி வீட்டை வாடகை கேட்பது போல் நடித்து பரிமளாவை கொலை செய்துவிட்டு 23 சவரன் நகை, செல்போன் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விருதம்பட்டு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(32), கள்ளக்குறிச்சியை சேர்ந்த அருள்நாதன்(29), விழுப்புரத்தை சேர்ந்த பாலா(எ) பாலமுருகன்(24) ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதில் 4 பிரிவுகளின் கீழ் தலா 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 பேருக்கும் தலா 4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

Views: - 0

0

0