மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் வரவேற்பு

4 September 2020, 5:03 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை பராமரிக்க ஒதுக்கப்பட்ட காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சின்னயாபுரத்தில் உள்ள இடத்தில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் வரவேற்பு செய்யப்பட்டு நடைபயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை இயற்கையான சூழலில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காளதீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சின்னையாபுரம் பூச்சியார் தோட்டம் வார்டு-பி பிளாக்கில் 9-ல் ஒரு ஏக்கர் நிலத்தில் இன்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மணக்குள விநாயகர் யானைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் யானை லஷ்மி அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டது. இதில் மணக்குள விநாயகர் கோவில் அறங்காவல் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், உறுப்பினர் பரசுராமன், நிர்வாக அதிகாரி வெங்கடேசன், மற்றும் காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் குணசேகரன், செயாளர் சீனுவாசன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 0

0

0