தூய்மையான காற்றை சுவாசிக்க 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

7 November 2020, 5:58 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே காற்றுமாசை குறைத்து தூய்மையான காற்றை சுவாசிக்க 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான 1.30 ஏக்கர் பரப்பளவில் அடர்காடுகள் உருவாக்கும் (மியாவாக்கி) திட்டத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். தற்போது பெருகி வரும் காற்று மாசு குறைத்து தூய்மையான காற்றை சுவாசிக்க கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்து 54 நாட்டு வகை மரங்களான மகிழம், சொர்க்கம்,

நீர்மருது, மலைவேம்பு, புங்கமரம், பாதாம், தேக்கு, வேங்கை, எலுமிச்சை,கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்வற்க்கான பணிகளை இன்று துவக்கி வைத்தார். இவ்விழாவில் பேரூராட்சிக்கான முன் மாதிரி செயல்வடிவ புத்தகத்தை கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது எழுதியதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெகதீஸ்வரன் பெற்றுக் கொண்டார். விழாவில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், லால்குடி கோட்டாச்சியர் வைத்தியநாதன் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தன்னார்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

Views: - 15

0

0