மாற்று இடம் வழங்காத வட்டாட்சியரைக் கண்டித்து காத்திருப்பு போராட்டம்

26 August 2020, 4:01 pm
Quick Share

திருச்சி: 4 வழிச்சாலை அமைக்க குடியிருப்புகளை இழந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு மாற்று இடம் வழங்காத வட்டாட்சியரைக் கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி, வடுகர்பேட்டை, ராஜா டாக்கீஸ் அகிய பகுதியில் சாலையோரத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வந்தனர். தற்போது திருச்சி சிதம்பரம் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இடத்தினை கையப்படுத்திய வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.

மாற்று இடம் வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களும் இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் உண்ணாவிரதம் இருந்தும் நடவடிக்கைகள் இல்லை. இது குறித்து லால்குடி வருவாய் வட்டாட்சியர் உரிய நடவடிக்கைகள் எடுக்க மறுப்பதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்கள் 20 பெண்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்கப்படுமென கோட்டாட்சியர் அளித்ததால் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டனர்.

Views: - 22

0

0