பேருந்து நிலைய நுழைவு வாயில் பெரும் பலைகை வாகனம் மோதி சரிவு..!!
6 August 2020, 10:44 amகோவை :நள்ளிரவில் உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நுழைவு வாயில் பெரும் பலைகை வாகனம் மோதி சரிவு இரவு நேரம் எனதால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு.
உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் ராட்சசன் பேருந்து நிலைய போர்டு உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த லாரி ஒன்று அந்த போர்டின் மீது மோதியதால் மழை நேரத்தில் வழுவிழந்து காணப்பட்ட பலகை கீழே சரிந்தது. இரவு நேரம் என்பதால் உயிர்சேதம் ஏதுவும் இல்லாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்த்தது. உடனடியாக சம்பவம் அறிந்த காவல்துறை அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்பு ராட்சத கிரேன் மூலம் அந்த போர்டு பத்திரமாக அகற்றப்பட்டது. பிரதான சாலை மேம்பால பணிகளுக்காக அளிக்கப்பட்டுள்ளதால் பேருந்து நிலைய உட்புறமாக அனைத்து வாகனங்களும் சென்று வரக்கூடிய சூழ் நிலையில் நேற்று இரவு வந்த வாகனம் ஒன்று இடித்து பலகை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.
ஒருவேளை இந்த சம்பவம் பகல் நேரத்தில் நடந்து இருந்தால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் அது தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து மேம்பால பணிகளை முடிக்க வேண்டும் என்ற ஒரு சூழலும் எழுந்திருக்கின்றன.
0
0