தாழையூத்து கொலை வழக்கு: மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணி தொடக்கம்

15 July 2021, 11:43 pm
Quick Share

நெல்லை: தாழையூத்து கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய ட்ரோன் கேமரா மூலம் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாழையூத்து கொலை வழக்கில் நல்லதுரை, சங்கிலிபூதத்தான், குருசச்சின் மற்றும் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனார். இந்த நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் சிங்கிகுளம், பெத்தானியா மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்து. அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணியில் ஈடுபடுமாறு தனிப்படை காவல் துறையினருக்கு உத்திரவிட்டார். இதனடிப்படையில் DSP ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பெத்தானியா மலை பகுதிக்கு சென்று ட்ரோன் கேமரா மூலம் எதிரிகளை தேடி வருகின்றனர்.

Views: - 24

0

0