உதகையில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் தொடக்கம்

1 December 2020, 4:24 pm
Quick Share

நீலகிரி: உதகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கொரோனா சிறப்பு தடுப்பு அதிகாரி கலந்துகொண்ட கொரோனோ விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த அனைத்துத் துறை சார்ந்தவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹீ மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், மாவட்டத்தில் கொரோனோ எண்ணிக்கை குறைந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், முதல் நிலையை தற்போது கடந்துள்ள நிலையில் இரண்டாம் நிலை என்பது தொடங்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பொது இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனோவால் பாதித்தவர்களும் கொரோனோ பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களும் மருத்துவர்களும் தாங்கள் செய்த பணியை பற்றி எடுத்துக் கூறினார். மேலும் கொரோணா தடுப்பு குறித்த எமதர்மன் சித்திரகுப்தன் வேடமணிந்த மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு, துணை சுகாதார இணை இயக்குனர் பாலுசாமி, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Views: - 17

0

0