உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

13 July 2021, 3:27 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பாக உலக மக்கள் தொகை தினம் இன்று நடைபெற்றன. இந்த உலக மக்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் நவீன ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்கள் அறுவை சிகிச்சை,அவசரகால கருத்தடை முறை போன்ற பதாதைகளை வண்டியில் பொருத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த வாகனம் நகர்புறம் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Views: - 267

0

0