‘GO GREEN DHARMAPURI” என்ற கைப்பேசி செயலி தொடக்கம்

Author: Udayaraman
4 October 2020, 8:24 pm
Quick Share

தருமபுரி: நல்லம்பள்ளியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பசுமை தருமபுரி செயல்திட்டத்தின் கீழ் ‘GO GREEN DHARMAPURI” என்ற கைப்பேசி செயலியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும் போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பசுமை தருமபுரி செயல்திட்டத்தின் கீழ் ‘‘GO GREEN DHARMAPURI” என்ற கைப்பேசி செயலியை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டத்தின் மூலம் 2020-2021 ஆம் ஆண்டில் 25000 மரக்கன்றுகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தருமபுரி வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மட்டும் பசுமைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மரக்கன்றுகள் நடுவதற்கு விருப்பமுள்ள தனிப்பட்டவர்களோ, அமைப்புகளோ மரக்கன்றுகள் நட தகுந்த குழிகளை அமைத்து தயாராக வைத்திருந்தால் அவரவர் இடங்களுக்கே சென்று மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக ஒரு கைப்பேசிச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடப்பாண்டில் தருமபுரி வட்டம் மற்றும் தருமபுரி நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பசுமை சூழல் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என அமைச்சர் பேசினார்.

Views: - 60

0

0