முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

9 May 2021, 10:55 pm
Quick Share

திருச்சி: முன்விரோதம் காரணமாக திருச்சியில் வழக்கறிஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது குழந்தைக்கு சைக்கிள் கற்றுக் கொடுப்பதற்காக பீமநகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் போலீசார் கோபிகண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹோமத்குமார் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோபி கண்ணன் செயல்பட்டதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக ஹோமத்குமார் தரப்பினர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 125

0

0