விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
6 March 2021, 3:54 pmதிருச்சி: விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் நீதிமன்ற வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ககருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .
டெல்லியில் விவசாயி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 100வது நாளாக ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து ஆர்பாட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கும் வகையில் திருச்சியில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வாயில் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் செயல்படுகிறது அவருக்கு ஆதரவாக தமிழகத்தில் அதிமுக செயல்படுகிறது. எனவே, இதனை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
விவசாய ஆதரவாக வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் தெரியப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்திய நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
0
0