அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் .!

24 January 2021, 5:26 pm
Quick Share

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் செய்து அகிலத்திரட்டு குறித்து கேட்டறிந்தார்.

குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று குமரி மாவட்டம் வந்தடைந்தார். தொடர்ந்து அவர் இன்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் தலைப்பாகை அணிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்பு வனம் சென்று அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் சந்தித்து அகிலத்திரட்டு குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக அன்புவனம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகரை சால்லே அணிவித்து வரவேற்ற பாலபிரஜாபதி அடிகளார் அவருக்கு அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு புத்தகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் நாஞ்சில் பி.சி. அன்பழகன் ,பி.டி.செல்வகுமார் ,மாஸ்டர் திரைப்பட பிரபலம் பவி டீச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0