பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
28 June 2021, 2:29 pm
Quick Share

திண்டுக்கல்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே சிபிஎம் சிபிஐ விடுதலை சிறுத்தை கட்சி கள், இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயிர் காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்காமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பயோடெக் நிறுவனம் சார்பில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். வருமான வரி கட்டாத அனைவருக்கும் 6 மாத கால நிவாரண தொகையாக ரூபாய் 500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம், சிபிஐ, சிபிஐ எம்எல், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Views: - 127

0

0