சாலைகளை உடனடியாக சரி செய்ய கோரி சட்டமன்ற உறுப்பினர் மனு

Author: Udayaraman
10 October 2020, 1:56 pm
Quick Share

வேலூர்: வேலூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய கோரி வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் ஆணையர் சங்கரனை வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், "சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், கஸ்பா கொணவட்டம், தோட்டப்பாளையம், பூந்தோட்டம்  உள்ளிட்ட 36 வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் தரமற்று காணப்படுவதாகவும், மேலும் மழைநீர் வடிகால்வாய்களும் இடிந்து விழுந்தும் மூடியும் உள்ளது.மேலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் சீரமைக்கபடவில்லை, அவற்றையும் உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தார்.

Views: - 29

0

0