ரெட்டியார்பட்டி ஏரியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு…

Author: kavin kumar
25 October 2021, 3:57 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே ரெட்டியார்பட்டி ஏரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் ரெட்டியார்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கொல்லிமலை புளியஞ்சோலை வழியாக தண்ணீர் மழைக்காலங்களில் வருவது வழக்கம். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரெட்டியார்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து ஏரி நிரம்பி வழிந்துள்ளது.வழிந்தோடும் தண்ணீர் துறையூர் தாலுகா வடக்கிப்பட்டி, நாவநாயக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு செல்கிறது. இது தவிர உபரி நீர் வாய்க்கால் வழியாக தா.பேட்டை ஒன்றியம் கரிகாலி, கொழிஞ்சிபட்டி, வடமலைப்பட்டி, ஆராய்ச்சி, வளையெடுப்பு, மங்களம் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளதுதற்போது தா.பேட்டை ஒன்றிய பகுதிகளுக்கு வரும் மதகுகளில் நிர்ணயித்த அளவு தண்ணீர் வருவதில்லை என்றும், மதகின் கதவுகளை சிலர் குறைத்து வைப்பதால் தண்ணீர் வருவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தா.பேட்டை ஒன்றிய விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் துறையூர் ஒன்றிய விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு உரிய தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தனர். இதையடுத்து ரெட்டியார்பட்டி ஏரிக்கு நேற்று திருச்சி ஆட்சியர் சிவராசு நேரில் சென்று பாசன மதகுகள் மற்றும் ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரு தரப்பு விவசாயிகளும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அலுவலகத்தில் உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும். தனிநபர்கள் மதகின் கதவுகளை இயக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரு தரப்பு விவசாயிகளும் பாதிக்காத வகையில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று தெரிவித்தார்.அப்போது முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் துறையூர் ஒன்றியம், தா.பேட்டை ஒன்றிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் முறையான வகையில் பங்கீடு செய்து தருவதற்கு ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டார்.

அப்போது தா.பேட்டை ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன், மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் சௌந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், திமுக நிர்வாகிகள் பெரியசாமி, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Views: - 169

0

0