ஆக்சிஜன்கள் தட்டுப்பாடின்றி மருத்துவமனைகளுக்கு வழங்க சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

14 May 2021, 9:03 pm
Quick Share

சேலம்: சேலத்தில் ஆக்சிஜன்கள் தட்டுப்பாடின்றி மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். இதனிடையே சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் சேலம் மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் மாவட்ட அளவில் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நோயாளிகளுக்கு மருத்துவம் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

மருத்துவமனைகளில் படையெடுத்து வரும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ராமனுடன் பாமக சட்ட மன்ற உறுப்பினர் அருள் மேற்கொண்ட ஆலோசனையின் போது சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் சேலம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஆலையிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்சிஜன் வெளி மாவட்டங்களுக்கு அனுப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் கேட்டுக்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் தயாராகும் ஆக்சிஜன் அனைத்தும் மாவட்ட மக்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உருளைகளை பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியருடன் மேற்கொண்ட ஆலோசனையின் போது மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளையும் அருள் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது பாமக மாநகர செயலளர் ரத்தினம் உடனிருந்தார்.

Views: - 41

0

0