இறந்த நிலையில் தேயிலை எஸ்டேட்டில் சிறுத்தை உடல் மீட்பு

5 March 2021, 6:35 pm
Quick Share

நீலகிரி: கோத்தகிரியில் இறந்த நிலையில் தேயிலை எஸ்டேட்டில் சிறுத்தை உடல் மீட்கபபட்ட சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே புடியங்கி கிராமத்தில் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் அவ்வழியாக சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தை இறந்திருப்பதாக பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் புடியங்கி சென்று பார்த்தபோது சிறுத்தை இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில்,
10 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒரு வாரம் முன்பு இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவித்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்தற்கு காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0