ஊருக்குள் வலம் வரும் சிறுத்தை… இரவு நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

1 August 2020, 9:10 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி காப்புக்காடு பகுதியில் சிறுத்தை காட்டுப் பன்றி செந்நாய் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் ஆடு மாடு வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கல்லப்பாடி கிராமத்திற்குள் இரவு சிறுத்தை ஊருக்கு வந்து கோவிந்தராஜ் என்பவரின் ஆட்டுக் கொட்டாயில் இருந்த ஆற்றை கடக்க முயன்றபோது நாய்களும் பொதுமக்களும் கூச்சலிட்டதில் சிறுத்தை காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டன. இதனால் கிராமமக்கள் சிறுத்தை பயத்தால் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு 10 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ஆடு மாடுகளை பத்திரமாக கட்டி வைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரித்து வருகின்றனர். எனவே அப்பகுதி மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.