24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

27 January 2021, 4:49 pm
Quick Share

புதுக்கோட்டை: கொலை வழக்கில் 24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் சகோதரியை வேலாயுதபெருமாள் என்பவர் கிண்டல் செய்துள்ளார். சாமுவேல் வேலாயுதபெருமாளை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வேலாயுத பெருமாள் சாமுவேலுவை பேனா கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சாமுவேல் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வேலாயுத பெருமாளை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் 1991 ஆம் ஆண்டு நடந்தது. அன்று கைது செய்த வேலாயுதம் பெருமாள் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த வேலாயுத பெருமாள் தலைமை தலைமறைவாகிவிட்டார்.

பிடிவாரண்டு பிறப்பித்து காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் இரும்பு கடையில் வேலை பார்த்த வந்ததாக தகவல் கிடைத்ததின் பெயரில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்தனர். இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு விசாரணை நடந்தது கொலை செய்துவிட்டு தலைமறைவானது உறுதியானது. இதையடுத்து நீதிபதி அப்துல்மாலிக் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

Views: - 0

0

0