மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

By: Udayaraman
31 July 2021, 4:57 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காக்கா கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் சமையல் வோலை பார்த்து வந்துள்ளார் கடந்த 2007ஆம் ஆண்டு நெய்வோலியை சேர்ந்த இந்திரா திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஜெயபால் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு மனைவி இந்திராவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2018 மே 26 ஆம் தேதிபணம் வாங்கி வரச்சொல்லி இந்திராவை இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த என்கிற திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மே 31ம் தேதி உயிரிழந்தார்.

நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணைகள் ஜெயபாலனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ரூபாய் 5,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு அளித்தார்.

Views: - 88

0

0