தனியார் விடுதியில் மதுபான பாட்டில்கள் விற்பனை: 1080 மதுபான பாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

Author: kavin kumar
13 August 2021, 2:56 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் தனியார் விடுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1080 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மதுரை சாலையில் இயங்கி வரும் தனியார் விடுதியில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்த தனியார் விடுதியில் சோதனை நடத்திய மேற்கு காவல் நிலைய போலீசார் அனுமதியின்றி சுயலாபத்திற்காக அதிக விலைக்கு விற்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1080 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கு பணியில் இருந்த காந்திராஜன், வேல் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரொக்கப் பணம் ரூபாய் 18 ஆயிரத்து 300 ரூபாயையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 197

0

0