மதுக்கடைகள் மூடிய பிறகு ஆட்டோவில் வைத்து மதுபான விற்பனை: பெண்,சிறுவன் உட்பட 4 பேர் கைது…

Author: Udhayakumar Raman
21 October 2021, 1:28 pm
Quick Share

சென்னை: சென்னையில் மது கடைகள் மூடிய பிறகு கள்ளச் சந்தையில் ஆட்டோவில் வைத்து மதுபானம் விற்ற பெண், சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதுக்கடைகள் மூடிய பிறகு ஆட்டோவில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் , கொடுங்கையூர் போலீசார் கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் 9 வது தெரு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர். அதில் சுமார் 20 மது பான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் கொடுங்கையூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த நளினி, அம்பத்தூர் செல்லியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சாரதி, வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது.

மேலும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிறுவனைத் தவிர மற்ற 3 பேருக்கும் ஏற்கனவே கள்ளச் சந்தையில் மதுபானம் விற்ற சில வழக்குகள் உள்ளது. இவர்கள் மதுக்கடைகள் மூடிய பின்பு மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு ஆட்டோவில் குறிப்பிட்ட இடங்களில் நின்று மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 17 வயது சிறுவனை சிறுவர்  சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Views: - 89

0

0