கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது:வனத்துறையினர் வேண்டுகோள்

11 October 2020, 5:13 pm
Quick Share

நீலகிரி: உதகை அருகே ஏம்ரால்டு பகுதியில் உலா வரும் புலியால் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது எமரால்டு கிராமம் இங்குள்ள மக்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக எமரால்ட் – காட்டு குப்பம் சாலையில் புலி ஒன்று உலா வருகிறது.

இந்த புலி கால்நடைகளை தாக்கும் என்ற அச்சம் இருப்பதால் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் பொதுமக்கள் யாரும் தனியாக வனப்பகுதிக்கு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 33

0

0